2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சீனாவில் மண்சரிவு: 13 பொதுமக்கள் பலி; 86 பேர் காணாமல் போயுள்ளனர்

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஏற்பட்டிருக்கும் மண்சரிவில் சிக்கி 13  பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் அதேவேளை, 86 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலேயே  இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 2000 பொதுமக்கள் இந்த மண்சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த மண்சரிவில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

சீனாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்திருந்ததினால், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--