Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடானின் டார்ஃபர் பிராந்தியத்தில் பழங்குடியின மோதல்களில், அண்மைய சுற்று வன்முறையில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக சூடானிய வைத்தியர்களின் மத்திய செயற்குழு எண்ணிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
அல்-ஜெனெய்னா நகரத்தில் இடம்பெறும் நிகழ்வுகளிலிருந்தான உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று முன்தினம் காலையிலிருந்து 84ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டரில் அறிக்கையொன்றில் குறித்த செயற்குழுவின் உள்ளூர்க் கிளை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோதல்களில் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 160 பேர் காயமடைந்ததாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மோதல்களானது ஆரம்பத்தில், அல்-ஜெனினாவிலுள்ள அரேபிய வழிப்போக்கர்களுக்கெதிரான மஸ்ஸலிட் பழங்குடியினர்களானதாக இருந்துள்ளது. பின்னர், அப்பகுதியிலுள்ள ஆயுதந்தரித்த குழுக்களின் பங்கெடுப்பில் பரந்தளவான வன்முறையாக மாறி வீடுகள் உள்ளடங்கலாக சில கட்டடங்கள் கொளுத்தப்பட்டிருந்தன.
1 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
9 hours ago