2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சூ கிக்கெதிராக பொலிஸாரால் குற்றச்சாட்டுகள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கிக்கெதிராக, சட்டரீதியற்ற முறையில் தொடர்பாடல் சாதனங்களை இறக்குமதி செய்ததற்காக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்துள்ள அந்நாட்டு பொலிஸார், அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விசாரணைகளுக்காக தடுத்து வைப்பர் என பொலிஸ் ஆவணமொன்று வெளிப்படுத்தியுள்ளது.

மியான்மார் தலைநகர் நெய்படாவிலுள்ள சூ கியின் வீட்டைத் தேடியதில் ஆறு வோக்கி டோக்கி றேடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணமொன்றில் பொலிஸ் தெரிவித்துள்ளதுடன், இவை சட்டரீதியற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .