Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பதவிநீக்க விசாரணையானது நேற்று குழம்பியிருந்தது.
உயர் பாதுகாப்பு விசாரணை அறையொன்றுக்குள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நுழைந்து சாட்சியொருவரின் சாட்சியத்தை தாமதமாக்கிய நிலையிலேயே குறித்த பதவிநீக்க விசாரணையானது குழம்பியிருந்தது.
உக்ரேனுடனான தனது தொடர்பாடல்கள் தொடர்பில் தன்னை பதவிநீக்க முயலும் ஜனநாயக் கட்சியின் முயற்சிகளுக்கெதிராக கடுமையாகப் போராடுமாறு குடியரசும் கட்சியின் பிரதிநிகள் சபையின் உறுப்பினர்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பே ஊக்குவிருந்தார்.
இந்நிலையிலேயே, உக்ரேன் மற்றும் ரஷ்ய விவகாரங்களை பார்வையில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியான லோரா கூப்பர் விசாரணையொன்றுக்கு செல்ல முன்னர், விசாரணையில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்படாத இரண்டு டசினுக்கும் மேலான பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் விசாரணைக்குள் சென்றிருந்தனர்.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு முன்னால் மூடிய அறைக்குள் லோரா கூப்பர் விசாரிக்கப்படவிருந்தார்.
23 minute ago
30 minute ago
35 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
35 minute ago
37 minute ago