2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப்பின் சி.என்.என் காணொளியின் உரிமையாளர் மன்னிப்புக் கோரினார்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.என்.என் தொலைக்காட்சியைக் கேலி செய்யும் வகையில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் பகிரப்பட்ட கேலியான காணொளியை உருவாக்கியவர் எனக் கூறப்படும் நபர், தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

றெடிட் என்ற இணையத்தளத்தில், ஆபாசமான பெயரைப் பயனர் பெயராகக் கொண்ட அந்த நபர், கடந்த புதன்கிழமை, குறித்த காணொளியின் அசையும் புகைப்பட வடிவத்தை வெளியிட்டிருந்தார். அதன் பின்னரே அது, காணொளியாக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் பகிரப்பட்டிருந்தது.

இதன் பின்னர், குறித்த நபர் தொடர்பான கவனம் அதிகமாக எழ, தனது றெடிட் கணக்கின் மூலமாக, இனவாத, யூதர்களுக்கு எதிரான கருத்துகளை அவர் வெளிப்படுத்தியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவர், தனது பகிர்வுகளுக்காக மன்னிப்புக் கோரியதோடு, ஊடகங்களுக்கு எதிராக வன்முறையை அவர் ஆதரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கவனத்தை ஈர்ப்பதற்காகவே, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், அனைவரையும் ஏற்றுச் செயற்படும் நபரே தானெனவும் குறிப்பிட்டார்.

ஆனால், குறித்த காணொளியை ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்த பின்னர், றெடிட் தளத்தில் பதிவொன்றைச் செய்த அவர், தனது உருவாக்கத்தை, ஜனாதிபதியே பகிர்ந்தமை தொடர்பாகக் கௌரவம் அடைவதாகத் தெரிவித்திருந்தார்.

எனவே, குறித்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சி.என்.என் தொலைக்காட்சி பெற்றுக் கொண்டுள்ள நிலையில், அவற்றை வெளியிடக் கூடாது என்பதற்காகத் தான், மன்னிப்புக் கோருவது போல நடிக்கிறாரா என, ஒரு தரப்பினர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X