2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

‘திக்ரே படைகளின் 15 உறுப்பினர்களைக் கொன்றோம்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திக்ரே பிராந்தியத்தின் முன்னாள் ஆளும் கட்சியின் 15 உறுப்பினர்களைக் கொன்றதாகவும், எட்டுப் பேரைக் கைப்பற்றியதாகவும் எதியோப்பிய இராணுவம் நேற்று தெரிவித்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்டவர்களில் திக்ரே பிராந்தியத்தின் முன்னாள் ஜனாதிபதியும், திக்ரேயின் ஆளும் கட்சியின் முன்னாள் தலைவருமான அபே வெல்டுவும் உள்ளடங்குவதாக எதியோபிய தேசிய பாதுகாப்பு படையின் பிரிகேடியர் ஜெனரலொருவரை மேற்கோள்காட்டி குறித்த எதியோப்பிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொல்லப்பட்டவர்களுள் திக்ரே பிராந்தியத்தின் பிரதிப் பொலிஸ் ஆணையாளரும் உள்ளடங்குவதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திக்ரே பிராந்தியத்தின் முன்னாள் உப ஜனாதி ஏப்ரஹாம் டெகெஸ்டேயும் கைப்பற்றப்பட்டதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .