2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தாய்வானுகருகில் விமானந்தாங்கிக் கப்பல் பயிற்சி: சீனா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்வானுக்கருகில் சீன விமானந் தாங்கிக் கப்பல் குழுவொன்று பயிற்சியில் ஈடுபடுவதுடன், இவ்வாறான பயிற்சிகள் வழமையாகுமென சீனக் கடற்படை நேற்றிரவு தெரிவித்துள்ளது.

தாய்வானுக்கருகிலுள்ள கடற்பரப்பில் வழமையான பயிற்சி நடவடிக்கைகளை, லியோனிங்க் தலைமையிலான விமானந் தாங்கிக் கப்பல் குழு மேற்கொள்வதாக கடற்படை கூறியுள்ளது.

தேசிய இறையாண்மை, பாதுகாப்பு, அபிவிருத்தி விடயங்களுக்காக கப்பலின் கொள்ளவை மேம்படுத்தலே பயிற்சியின் நோக்கமாமென கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X