2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தலிபான் சிறைக்கதிகள் விடுதலைக்கு இணங்கிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தலிபான் 400 சிறைக்கைதிகளை விடுவிப்பதை அங்கிகரிப்பதுக்கான தீர்மானமொன்றை ஆப்கானிஸ்தானின் பாரிய சட்டசபையான லொயா ஜிர்கா நிறைவேற்றியதையடுத்து 400 தலிபான் சிறைக்கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி இணங்கியுள்ளார்.

மூன்று நாள்கள் லொயா ஜிர்காவின் இறுதியிலேயே குறித்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் பழங்குடியினத் தலைவர்களும், ஏனைய பங்காளர்களும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வழமையாகக் கூடுவது வழக்கமாகும்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலிபான்களுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முக்கிய தடைக்கல்லாக சிறைக்கைதிகள் விடுவிப்பு காணப்பட்டிருந்தது. அனைத்து தலிபான் சிறைக்கைதிகளையும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் விடுவித்தபோதும் இறுதி 400 பேரை விடுவித்திருக்கவில்லை.

அந்த 400 பேரில் 150க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பாரிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டோர் பலர் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--