Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தென் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலொன்று இடம்பெறலாம் என இராணுவம் தகவல்களைப் பெற்றுள்ளதாக இந்திய இராணுவத்தின் தென் கட்டளையகத்தின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் எஸ்.கே. சைனி நேற்று தெரிவித்துள்ளார்.
சர் கிரீக் பகுதியில் கைவிடப்பட்ட படகுகள் சில மீட்கப்பட்டதாக பூனேக்கு அருகே இடம்பெற்ற நிகழ்வொன்றில் செய்தியாளர்களிடம் எஸ்.கே. சைனி கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே, இந்தியாவின் தென் பகுதியிலும், இந்தியத் தீபகற்பத்திலும் பயங்கரவாதத் தாக்குதலொன்று இடம்பெறலாம் என்ற பல தகவல்களை தாங்கள் பெற்றதாகத் தெரிவித்துள்ள எல்.கே. சைனி, சர் கிரீக் பிராந்தியத்தில் ஆபத்து அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கேரள மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் உயர் எச்சரிக்கையைப் பேணுமாறு கேரளாவின் பொலிஸ் ஆணயாளர் நாயகம் லோகநாத் பெஹெரா கூறியுள்ளார்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்புடன் இருக்குமாறு பொலிஸாருக்கு லோகநாத் பெஹெரா பணித்துள்ளார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையைக் கொண்டாடச் செல்லும் பாரிய எண்ணிக்கையில் மக்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் வெளியீடொன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்.கே. சைனி வெளிப்படுத்திய தென் என்ற வார்த்தையானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாத்திரமல்லாது, அது முழுமையான தென் தீபகற்பத்தையும், குஜராத்தின் பகுதிகளையும் உள்ளடக்குவதாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள பாதுகாப்புப் பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தென்னிந்தியாவில் இடம்பெறக்கூடிய பயங்கரவாதத் தாக்குதலொன்றின் ஆபத்துகள் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில், 974 கிலோ மீற்றர் நீளமான கரையோரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago