2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் பாராளுமன்றத்திலிருந்து நம்பிக்கை வாக்கெடுப்பொன்றை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் எதிர்கொள்வார் என அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்றீக்-ஈ-இன்சாஃப் (பி.டி.ஐ) அதிகாரிகள் தெரிவ்வித்துள்ளனர்.

பாகிஸ்தானின் நேற்றைய செனட் தேர்தல்களின்போது, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்களின் கட்சி (பி.பி.பி) முன்னாள் பிரதமரான யூசுஃப் ராசா கிலானியிடம் நிதியமைச்சரான பி.டி.ஐ-இன் அப்துல் ஹபீஸ் ஷைக், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே இவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பை பிரதமர் கான் எதிர்கொள்ளவுள்ளார்.

எவ்வாறெனினும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின்படி பி.டி.ஐ கட்சியானது, 96 ஆசனங்களைக் கொண்ட செனட்டில் முன்னர் தக்க வைத்திருந்த 14 ஆசனங்களை 26 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பி.பி.பி கட்சி 20 ஆசனங்களையும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் நவாஸ் பிரிவானது 18 ஆசனங்களையும் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தத்தமது நட்புறவுக்கட்சிகளுடன் குறித்த கட்சிகள் இரண்டும் 53 ஆசனங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்ற நிலையில், செனட்டை இவை கட்டுப்படுத்த முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .