2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

‘பிரெஞ்சுத் தொண்டுப் பணியாளர்கள் அறுவர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைகரிலுள்ள வனவிலங்குப் பூங்காவொன்றில், மோட்டார்சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் பிரெஞ்சுத் தொண்டுப் பணியாளர்கள் அறுவரையும், நைஜீரிய வழிகாட்டியொருவரையும், ஓட்டுநரொருவரையும் நேற்று கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைகர் தலைநகர் நியாமேயிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஒட்டகச்சிவிங்கி சரணாலயமொன்றிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றதாக தில்லபெரி பிராந்தியத்தின் ஆளுநரான திட்ஜனி இப்ராஹிம் கடியெல்லா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆறு பேரும் சர்வதேச தொண்டு நிறுவனமொன்றுக்காகப் பணியாற்றியதாக நைகரின் பாதுகாப்பமைச்சர் இஸாவுபெள கடம்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமது பணியாளர்கள் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரெஞ்சு மனிதாபிமான தொண்டுக் குழுவான ஏ.சி.டி.ஈ.டியின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு எவரும் உடனடியாக உரிமை கோரியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--