2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரெக்சிற் வரை ஸ்கொட்லாந்து காத்திருக்கும்

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்கிற்) விலகுவதற்கான நிபந்தனைகள் முடிவாகும் வரை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதற்கு, ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்துள்ளார்.

இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தனது திட்டத்தைப் பிற்போடுவதாக, முதன்மை அமைச்சர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம், 2019ஆம் ஆண்டு மார்ச்சிலேயே விலகவுள்ள நிலையில், அக்கட்சியின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், பிரெக்சிற்றுக்கு முன்னரேயே, இந்த விலகல் இடம்பெற்றிருக்கும்.

ஸ்கொட்லாந்தின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில், பிரெக்சிற் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், தமது அரசாங்கம் ஈடுபடும் எனத் தெரிவித்த ஸ்டர்ஜியோன், இன்னொரு சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால், தற்போதைய நாடாளுமன்றத்தில் காலம் நிறைவடையவுள்ள 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறுமெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .