Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 13 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தன்னை செனட்டின் பிரதி சபாநாயகரான ஜெனி அனெஸ் நேற்று அறிவித்துள்ளார்.
பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக்கவும், எதிர்க்கட்சி செனட்டரான ஜெனி அனஸை இடைக்கால ஜனாதிபதியாக உறுதிப்படுத்தவும் செனட் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறெனினும், செனட்டின் அமர்வொன்றுக்குரிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை செனட் அடைந்திருக்காத நிலையில் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக ஜெனி அனெஸ் பிரகடனப்படுத்துக் கொண்டார்.
தடைகள், முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக செனட் சபையின் பல உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.
பொலிவியாவின் மிகப்பெரிய கட்சியான முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் சோஷலிசத்துக்கான நகர்வு கட்சியின் தலைவர்கள் அமர்வில் கலந்து கொள்வதற்கான உறுதிமொழிகளைக் கோரியிருந்ததுடன், அதில் கலந்துகொண்டிருந்திருக்கவில்லை.
செனட் அமர்வொன்றுக்குரிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை அடையப்பட்டிருக்காதபோதும், ஜனாதிபதியாக ஜெனி அனெஸ் நியமிக்கப்பட்டதை அரசமைப்பு நீதிமன்றம் பின்னர் ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் எதிர்த்தரப்பினர் மாத்திரம் பிரசன்னமாகியிருந்த செனட்டில், இயலுமானவரை விரைவாக புதிய தேர்தல்களை தாங்கள் நடத்தவுள்ளதாக ஜெனி அனெஸ் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மெக்ஸிக்கோவிலிருந்து டுவீட் செய்த முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸ், மேற்குறித்த நகர்வை உடனடியாகச் சாடியிருந்ததுடன், கள்ளத்தனமான, வரலாற்றின் கொடிய ஆட்சிக் கவிழ்ப்பு என குறித்த நகர்வை விழித்திருந்தார். ஜெனி அனஸை ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தும் வலதுசாரிக் கொள்கைகளையுடைய செனட்டர் என அழைத்திருந்தார்.
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago