Shanmugan Murugavel / 2021 மார்ச் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரில் கடந்த மாத இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்ததான அமைதியின்மையின் மோசமான நாளாக நேற்று 38 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
குறைந்தளவான எச்சரிக்கையுடன் பொலிஸாரும், படைவீரர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவத்தைக் கண்ணுற்றோர் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 14 வயதான சிறுவன் உட்பட நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்து சென்ற இராணுவ ட்ரக்கள் தொட்ரணியொன்றிலிருந்த படைவீரரொருவரால் குறித்த சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவனது சடலத்தை ட்ரக்கொன்றில் ஏற்றி படைவீரர்கள் கொண்டு சென்றதாக றேடியோ பிறீ ஏஷியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மூடிய சந்திப்பொன்றில் நிலைமையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையானது நாளை கலந்துரையாடவுள்ளது.
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025