Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மாரில் அண்மைக்காலமாக இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் இவ் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந் நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தாய்லாந்தில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் இன்டர்நஷனல் 2020 என்ற அழகிப் போட்டியொன்றில் மியன்மாரைச்சேர்ந்த அழகியொருவர் தனது நாட்டில் இடம்பெரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக உரையொன்றினை நிகழ்த்தியுள்ளார்.

ஹான் லே(Han Lay) என அழைக்கப்படும் குறித்த அழகி தனது உரையில் தெரிவித்ததாவது ”இன்று என் நாட்டில் ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள்..தயவு செய்து மியன்மாருக்கு உதவுங்கள்.... எங்களுக்கு அவசர சர்வதேச உதவி இப்போது தேவைப்படுகின்றது... "இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இவர் அண்மையில் மியன்மாரின் மிகப்பெரிய நகரமான யங்கூனில் அந் நாட்டு இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025