Editorial / 2019 நவம்பர் 17 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், பிரித்தானியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை பிரித்தானிய அரசாங்கமும், ஆயுதப் படைகளும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன பனோரோமா, சண்டே டைம்ஸால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றானது 11 பிரித்தானிய துப்பறிவாளர்களிடம் கதைத்திருந்த நிலையில், போர்க்குற்றங்களுக்கான நம்பத் தகுந்த ஆதாரங்களை தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர்.
கொலைகளுக்கு படைவீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது.
ஈராக்கில் இருந்தபோது பிரித்தானியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரித்த ஈராக் வரலாற்று குற்றச்சாட்டுக்கள் அணி, ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குற்றங்களை விசாரித்த நோர்த்மூர் நடவடிக்கையிலுள்ளவர்களிடமிருந்து புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
தனக்கு ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான ஈராக்கில் தரகர்களுக்கு பணம் செலுத்தியதாக, 1,000க்கு மேற்பட்ட வழக்குகளை ஈராக் வரலாற்று குற்றச்சாட்டு அணிக்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் பில் ஷினர் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஈராக் வரலாற்று குற்றச்சாட்டுகள் அணி, நோர்த்மூர் நடவடிக்கையை மூட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
18 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago