2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வட கொரிய கொள்கை வகுப்பாளர் செயற்குழுவில் கிம்மின் சகோதரி இல்லை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரதான கொள்கை வகுப்பாளர் செயற்குழுவின் புதிய வரிசையொன்றில், அந்நாட்டுத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங்கின் பெயர் காணப்படவில்லை என அந்நாட்டு அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமது மத்திய செயற்குழுக்கான தேர்தல்களை நேற்று காங்கிரஸொன்றில் தொழிலாளர் கட்சி நடாத்தியிருந்தது. இக்குழுவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இராஜதந்திர, இராணுவ, பொருளாதார கொள்கை இலக்குகளை நிர்ணயிக்கிறது.

இந்நிலையில், மேற்படி செயற்குழுவில் உறுப்பினரொருவராக கிம் யோ ஜொங் இன்னும் காணப்படுகின்றார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தனது சித்தியான கிம் கயொங்க் ஹுயை அடுத்து இரண்டாவது பெண்ணாக பிரதான கொள்கை வகுப்பாளர் செயற்குழுவின் கிம் யோ ஜொங் இணைந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .