2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் புதிய தகவல்

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்டவெளியிலிருந்து வேற்றுக்கிரக வாசிகளின் சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி வரும் அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவின் புயேர்ட்டி ரிக்கோ பிரதேசத்திலிருந்து 1999 ஆம் ஆண்டு முதல் குறித்த நிறுவனம் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ரோஸ் 128 என பெயரிடப்பட்டிருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.இவை பெரும்பாலும் வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கலாம் என வானியல் நிபுணர், பேராசிரியர் ஏபெல் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.

ரோஸ் 128 என்ற நட்சத்திரம் சூரியனை விட 2 ஆயிரத்து 800 மடங்கு குறைவான ஒளியுடையதாக கணிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான ஆய்வுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் பல புதிய தகவல்களை உலகுக்கு வழங்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X