2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹொங் கொங் சட்டசபை இடைநிறுத்தப்பட்டது

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங்கின் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமை ஹொங் கொங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததோடு, அவரைப் பதவி விலகுமாறு இன்று மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட சட்டசபை அமர்வொன்றில் கோரிய நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், இவ்வாறானதொரு நிலைமை நேற்றும் ஹொங் கொங் சட்டசபையில் ஏற்பட்டிருந்த நிலையில் காணொளி மூலம் தனது வருடாந்த கொள்கையை நிகழ்த்தியிருந்த பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாம், அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதே நேற்று இரண்டாவது நாளாகவும் ஹொங் கொங் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை புதிய வீதி வன்முறையாக, கத்திகளையும், சுத்தியல்களையும் கொண்டிருந்த முகமூடி அணித்த தாக்குதலாளிகள், பாரியதொரு ஜனநாயக ஆதரவுக் குழுவின் தலைவரொருவரை நேற்று  தாக்கியுள்ளனர்.

அந்தவகையில், இது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சீன அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் உள்ளதெனத் தெரிவிக்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளை அங்கிகரிக்குமாறு கோரியிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் உரையில் கண்டு கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையிலிருந்து டசின் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்புக் காவலர்கள் வெளியேற்றியிருந்த நிலையில், அவர்கள் கோஷமிட்டிருந்ததுடன், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் இருக்கும் பதாதைகளைக் காண்பித்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X