2020 நவம்பர் 25, புதன்கிழமை

குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 24 துருக்கியப் படையினர் பலி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனைச்சாவடிகளில் குர்திஷ்; போராளிகளுடன் இடம்பெற்ற மோதல்ச் சம்பவங்களில் 24 துருக்கிய படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியான குர்திஷ் மாகாணத்தின் ஹக்கரி பகுதியில் மோதல் இடம்பெற்றதாக ஆளுநர் முவம்மர் ரெக்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்கிழக்குப் பகுதியான பிற்லஸ் மாகாணத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றும் ஏனைய மூவரும் பலியான ஒரு நாளின் பின்னர்  இந்த மோதல் நடைபெற்றது.  

இவ்வாறான தாக்குதல்கள்  அண்மைக்காலமாக அதிகம் குர்திஷ் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படுகின்றன.  

இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் வடஈராக்கில் குர்திஷ் இனத்தவர்கள் வாழும் பகுதிகள் மீது துருக்கியப் படைகள் வான் தாக்குதல்களை நடத்தின.

துருக்கியின் குர்திஷ் இனத்தவர் அதிகமாக வாழும் தென்கிழக்கிற்கு கூடிய சுயாட்சி கோரி குர்திஷ் கிளர்ச்சியாளர்கள்  போராடி வருகின்றனர்.

இதன் காரணமாக 1984ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .