2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஜப்பானில் சிகரெட் வரி 40 சதவீதத்தால் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானில் சிகரெட்டுக்களுக்கான வரியை பாரியளவில் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசாங்கம்  மேற்கொண்டுள்ளது.

புகைப்பிடித்தலை குறைக்கும் வகையிலேயே  இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஜப்பானில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 40 சதவீதத்தால் சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்படுகிறது.

ஜப்பானில் உணவு விடுதிகள், மாதுபானசாலைகள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, சில அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பதற்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் மூன்றிலொரு பங்கு ஆண்களும் 12 சதவீதமான பெண்களும் புகைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--