2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

10 ஆண்டு வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்?

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியை மறுத்துள்ள டிரம்ப், அது பொய் செய்தி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டொலர் வருமானம் பெற்றார். 

ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட போதிலும்(2016), ஜனாதிபதியாகி ஒராண்டான பின்னர்(2017) 750 டொலர் வருமான வரி செலுத்தினார். 

தனது வணிகம் முழுவதும் இழப்பைசந்தித்ததாக கூறி வருமானத்தை ட்ரம்ப் குறைத்து காட்டினார். 2018 ம் ஆ ண்டில் ட்ரம்ப் 47.4 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக கூறினார். 

ஆனால், அந்த ஆண்டு, 4,434.9 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள ட்ரம்ப், இது போலியான செய்தி. உண்மையில் எனக்கு கிடைத்த வருமானத்துக்கு நான் வரி செலுத்தியுள்ளேன். அது தணிக்கைக்கு உட்பட்டது” இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X