2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஆசியாவுக்கு ஒபாமா சுற்றுப்பயணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய பிராந்தியத்தின் மீதான முழு அக்கறையை தனது நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா  ஆசியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.

இதன்போது, நெருக்கமான பொருளாதார உறவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. ஆனால், சீனாவின் சக்திவாய்ந்த பிரசன்னம் உட்பட பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலான பேச்சுக்கள் முக்கிய விடயமாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு பல முன்னுரிமைகள் காணப்படுவதால், இப்பிராந்தியத்தில் கவனம் செலுத்தும் அமெரிக்காவின் ஆற்றலையிட்டு ஆசிய நட்பு நாடுகள் கவனம் கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--