2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சிரிய இரசாயனத் தாக்குதல்: விசாரணைக்கு ஐ.நா ஒப்புதல்

Administrator   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் உள்ளூர்ப் போரின் போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான வாய்ப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஏகோபித்த ஒப்புதல் இதன்போது எட்டப்பட்டது.


ஐக்கிய அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கப்பெற்றமை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கமானது, இதை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக அமைந்தது.


இந்தத் தீர்மானமானது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பி வைக்கப்படுமென்பதோடு, அவர் 20 நாட்களுக்குள் விசாரணைக் குழுவுக்கான அங்கத்தவர்களை நியமிப்பதோடு, விசாரணைகள் எவ்வாறு இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரைகளை மேற்கொள்வார்.


விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு 90 நாட்களுக்குள், அதன் முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .