Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பீன் அரசாங்கத்தை கவிழ்த்ததாக, நீதித்துறைக்கு அழுத்தம் வழங்கியதாக, கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல்களில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்தைக் நிறுவியதாக அந்நாட்டு இராணுவத் தளபதியான ஜெனரல் குவாமர் ஜாவீட் பஜ்வாவை இன்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் உள்நாட்டு சேவைகள் புலனாய்வு உளவு முகவரகத்தையும் (ஐ.எஸ்.ஐ) தனது அரசாங்கத்துக்கெதிராக சதித்திட்டம் தீட்டியதில் பங்கெடுத்ததாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் மோசடிக் குற்றச்சாட்டுகளில் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கடந்தாண்டு நவம்பரில் மருத்துவ சிகிச்சைக்காக பிரித்தானியத் தலைநகர் இலண்டனுக்கு அவர் சென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago