2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் அருகே 42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் சரக்கு கப்பல் ஜப்பான் அருகே நடுக்கடலில் மூழ்கியது.

42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் நியூசிலாந்திலிருந்து சீனா நோக்கி புறப்பட்டது சரக்கு கப்பல். ஜப்பானின் தென்மேற்கு கடல்பகுதியின் அமாமி ஒஹிமா தீவு அருகே பயணித்தது.

அப்போது, கடும் புயல் வீசியதால், கப்பலின் இன்ஜின் பகுதியை ராட்சத அலை தாக்கியதில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து மூழ்கியது.

இதில் பயணித்த மாலுமிகளில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கப்பலுடன் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது.

புயல் தா்க்கிய போது ஒரு மாலுமி மட்டும் கடலில் குதித்து உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--