2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

‘கொக்கெய்ன், ஹெரோய்னை கடத்த உதவிய மெக்ஸிக்க முன்னாள் பாதுகாப்பமைச்சர்’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பமைச்சர் சல்வடோர் சியன் வெய்கோஸ், பதவியிலிருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெல்ட்ரன்-லெய்வா குழுவின் பிரிவொன்றை பாதுகாத்ததுடன், எதிரிக் குழுக்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், போதைப்பொருள்களை கொண்டு செல்ல கடல்வழி போக்குவரத்தை கண்டுபிடித்ததாக ஐக்கிய அமெரிக்க வழக்குத் தொடருநர்கள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சலஸ் விமானநிலையத்தில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட சல்வடோர் சியன் வெய்கோஸ், ஐக்கிய அமெரிக்க விசாரணைகள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு எச்சரித்தமை உள்ளடங்கலாக பாதுகாப்புக்காக கையூட்டுக்களை பெற்றதாக நியூ யோர்க்கிலுள்ள வழக்குத் தொடருநர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X