Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபை,இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் அணி தொடரின் சம்பினாகியது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கோல்ட்ஸ் கழக அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வழங்கியது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வழங்கியது.
மூன்று நாள்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் அணி 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் டில்ஷான் சஞ்சீவ அதிகபட்சமாக 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் கோல்ட்ஸ் அணி சார்பில் நிபுன் ரன்சிக 4 விக்கெட்டுகளையும், கவிஷ்க அஞ்சுல 3 விக்கெட்டுகளையும், நிபுன் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி, ஜெஹான் டேனியல், விஷாட் ரந்திக மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 316 ஓட்டங்களைக் குவித்தது.
ஜெஹான் டேனியல் 89 ஓட்டங்கள், விஷாட் ரந்திக 63 ஓட்டங்கள் மற்றும் தனன்ஜய லக்ஷான் 61 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றனர்.
பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 5 விக்கெட்டுக ளையும், நிம்சர அதரகல்ல 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், 173 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை காரமணாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும், போட்டியில் மழை குறுக்கிட்டதால், முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களின்படி, கோல்ட்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டில்ஷான் சஞ்சீவ ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், நிமேஷ் விமுக்தி 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் நிபுன் ரன்சிக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025