Shanmugan Murugavel / 2016 ஜூலை 29 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர்கள் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணி வெற்றிபெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்து பழைய மாணவர் அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.மயூரன் 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கொக்குவில் பழைய மாணவர் அணி சார்பாக ரி.சத்தியன், எஸ்.சாம்பவன், ஆர்.ஜனுதாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
80 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் அணி, 9 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. வி.உத்தமக்குமரன் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக திலீபன் 2 விக்கெட்களைக் கைபற்றினார்.
ஆட்டநாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் கொக்குவில் அணியின் உத்தமகுமரன், தொடர்நாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் சிறிதரன், சிறந்த பந்துவீச்சாளராக அதே அணியின் திலீபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
35 minute ago
40 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
3 hours ago