2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கோலூன்றிப் பாய்தலில் சாதித்த அனித்தா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடத்தப்பட்ட சிரேஸ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜெகநாதன் அனித்தா கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடம் பெற்றார்.

முதலிடம் பெற்ற பின்னர் 3.35 மீற்றர் உயர தேசிய சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்ட போதும், அது பயனளிக்கவில்லை. எது எவ்வாறாயினும், இவர் கடந்த காலங்களில் இந்த 3.35 மீற்றர் உயரத்தை தாண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .