2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சம்பியனாகியது அராலி சரஸ்வதி

Editorial   / 2017 மே 24 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன், கே.கண்ணன்

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான, 16, 18 வயதுக்குட்பட்டோருக்கான வலைப்பந்தாட்டத்தில், அராலி சரஸ்வதி வித்தியாலய அணி சம்பியனாகியுள்ளது.   

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், பெண்களுக்காக வலைப்பந்தாட்டப் போட்டிகள், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில், நேற்று (23) நடைபெற்றன.   

16 வயதுக்குட்பட்டோருக்கான வலைப்பந்தாட்டத்தில், வட மாகாணத்தைச் சேர்ந்த 35 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றின. இதன் இறுதிப் போட்டியில், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி மோதியது. இதில், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி, 17-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.   

மூன்றாமிடத்துக்கான போட்டியில், வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அணியை எதிர்த்து வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. இதில், வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அணி, 16 -15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.  

18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 33 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றின. இதில், முதலிடத்தை, அராலி சரஸ்வதி வித்தியாலயமும், இரண்டாமிடத்தை, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும், மூன்றாமிடத்தை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியும், நான்காமிடத்தை, சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.  

அராலி சரஸ்வதி வித்தியாலயத்தின் 16, 18 வயதுக்குட்பட்டோருக்கான அணிகள், கடந்தாண்டு நடைபெற்ற வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டிகளிலும் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .