Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 10ஆவது மெய்வல்லுநர் போட்டியில், அம்பாறை கல்வி வலயம், 208 புள்ளிகளைப் பெற்றுச் சம்பியனாகத் தெரிவானது. 203 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இறுதிநாள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மனோகரன் கலந்துகொண்டதுடன், வலய கல்விப் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் 15ஆம் திகதி ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டி, நேற்று முன்தினம் (19) நிறைவுபெற்றது.
கடந்த 15ஆம் திகதி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டியில், கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உட்படப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3,000 வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கு கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 85 புள்ளிகளையும் கிண்ணியா கல்வி வலயம் 82 புள்ளிகளையும் மகாஓயா கல்வி வலயம் 57 புள்ளிகளையும் கல்குடா கல்வி வலயம் 49 புள்ளிகளையும் தெஹியத்த கண்டிய கல்வி வலயம் 49 புள்ளிகளையும் கந்தளாய் கல்வி வலயம் 47 புள்ளிகளையும் திருகோணமலை கல்வி வலயம் 44 புள்ளிகளையும் அக்கரைப்பற்று கல்வி வலயம் 43 புள்ளிகளையும் கல்முனை கல்வி வலயம் 42 புள்ளிகளையும் மூதூர் கல்வி வலயம் 40 புள்ளிகளையும் சம்மாந்துறை கல்வி வலயம் 21 புள்ளிகளையும் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் 17 புள்ளிகளையும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 13 புள்ளிகளையும் திருக்கோவில் கல்வி வலயம் எந்தவித புள்ளிகளையும் பெறவில்லை.
இதில் சம்பியனாகத் தெரிவான அம்பாறை கல்வி வலயத்தில் டி.எஸ்.சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயம் கூடுதலான பதக்கங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இரண்டாமிடத்தைப் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்தில், களுதாவளை மகா வித்தியாலயம், கூடுதலான பதக்கங்களைப் பெற்றது.
இதில் களுதாவளை மகா வித்தியாலயம், 16 தங்கப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள முன்னணிப் பாடசாலைகள் பலவும் மிகவும் பின்னடைந்து காணப்பட்டன. குறிப்பாக கல்முனை சாஹிரா கல்லூரி, எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டுப்போட்டியில், 20க்கும் அதிகமான பதக்கங்களை, இக்கல்லூரி பெற்றிருந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் திருக்கோவில் கல்வி வலயம், எந்தவித புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இக்கல்வி வலயத்தில், மாகாண மட்டத்தில் வெற்றி பெறக்கூடிய விளையாட்டு வீர, வீராங்கனைகளை பயிற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை, உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் கோருகின்றன.
ஐந்து நாட்கள் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த வீரா்கள் பலரும் தெரிவு செய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒற்றையர் சம்பியன்கள்:
12 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் - ஏ.சி.அப்துல்லாஹ் - பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம் ( நீளம் பாய்தல் -4.63 மீற்றர்)
12 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் - ஜீ.ஜீ.இமாஸி அசின்சனா கந்தளாவ வித்தியாலயம் (நீளம் பாய்தல் -4.17 மீற்றர்)
14 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் - கில்கேந்திரன் - மண்டூர் 40 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (குண்டுபோடுதல் -11.08 மீற்றர்)
14 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் - பி.றக்ஸனா - களுதாவளை மகாவித்தியாலயம் (நீளம் பாய்தல் - 4.46 மீற்றர்)
16 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் - ஜே.ரிசானன் - களுதாவளை மகா வித்தியாலயம் (குண்டு போடுதல் - 12.87 மீற்றர்)
16 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் - ஜீ.ஜீ.எம்.எச்.நிர்மாலி - அம்பாறை டிஸ்.எஸ்.சேனநாயக்க மத்திய மகாவித்தியாலயம் (நீளம் பாய்தல் -5.19 மீற்றர்)
18 வயதுப் பரிவு ஆண்கள் சம்பியன் - எம்.ஐ.எம்.அஸ்லம் - கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம் (நீளம் பாய்தல் 6.61 மீற்றர்)
18 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் - ஆர்.கஜேந்தி - பன்சேனை பாரி வித்தியாலயம் (நீளம் பாய்தல் - 4.94 மீற்றர்)
20 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் -ஏ.ஆபீத் - முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி (நீளம்பாய்தல் - 6.51மீற்றர்)
20 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் - ஏ.டி.எச்.அனுரங்கி - அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயம் ( 100 மீற்றர் 12.0 செக்கன்)
குழுப் போட்டிகள்:
அஞ்சலோட்டம் ஆண்கள் பிரிவு சம்பியன் - களுதாவளை மகா வித்தியாலயம் - 33 புள்ளிகள்
அஞ்சலோட்டம் ஆண்கள் பிரிவு இரண்டாமிடம் - டி.எஸ்.சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயம் - 23 புள்ளிகள்
அஞ்சலோட்டம் ஆண்கள் பிரிவு மூன்றாமிடம் - அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை - 10 புள்ளிகள்
அஞ்சலோட்டம் பெண்கள் பிரிவு சம்பியன் -டி.எஸ்.சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயம்
அஞ்சலோட்டம் பெண்கள் பிரிவு இரண்டாமிடம் - பன்சேனை பாரி வித்தியாலயம் மற்றும் பதியத்தலாவ மகா வித்தியாலயம் - 10 புள்ளிகள்
மெய்வல்லுநர் ஆண்கள் பிரிவு சம்பியன் - பட்டிருப்பு கல்வி வலயம் - 126 புள்ளிகள்
மெய்வல்லுநர் ஆண்கள் பிரிவு இரண்டாமிடம் - அம்பாறை கல்வி வலயம் - 87 புள்ளிகள்
மெய்வல்லுநர் ஆண்கள் பிரிவு மூன்றாமிடம் - கிண்ணியா கல்வி வலயம் - 82 புள்ளிகள்
மெய்வல்லுநர் பெண்கள் பிரிவு சம்பியன் - அம்பாறை கல்வி வலயம் - 121 புள்ளிகள்
மெய்வல்லுநர் பெண்கள் பிரிவு இரண்டாமிடம் - மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் - 85 புள்ளிகள்
மெய்வல்லுநர் பெண்கள் பிரிவு மூன்றாமிடம் - மட்டக்களப்பு கல்வி வலயம் - 81 புள்ளிகள்
ஆண்டின் சம்பியன் வீரர்கள்:
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர் வீரா் எம்.ஐ.எம்.அஸ்லம் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம்
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனை ஜீ.ஜீ.எம்.எச்.நிர்மாலி அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க மத்திய மகா வித்தியாலயம்.
11 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago