2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சம்பியனாகியது திருக்கோவில் அம்மன் அணி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 23 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்க கால்பந்து சுற்றுப் போட்டியில், திருக்கோவில் அம்மன் அணி சம்பியனாக தெரிவாகியது.

ஒன்பது அணிகள் பங்குகொண்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், திருக்கோவில் அம்மன் அணியும் திருக்கோவில் கதிரவன் அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற திருக்கோவில் அம்மன் அணி சம்பியனாகிக் கொண்டது.  

இதேவேளை, கிரிக்கெட்டில் தம்பிலுவில் றேன்சஸ் அணி சம்பியனாகிக் கொண்டது. விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுத் திடலில், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.பி ஹேரத் தலைமையிலேயே இச்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலும் ஒன்பது அணிகள் பங்குகொண்டிருந்தன. இறுதிப் போட்டிக்கு, தம்பிலுவில் றேன்சஸ் அணியும் திருக்கோவில் உதயசூரியன் அணியும் தெரிவாகி இருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணி, ஐந்து ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 49 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 50 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய றேன்சஸ் அணி, இரண்டு விக்கெட்டை இழந்து வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகத் தெரிவாகியது.

இச்சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தம்பிலுவில் றேன்சஸ் அணியினருக்கும், திருக்கோவில் அம்மன் அணியினருக்குமான வெற்றிக்கிண்ணங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.தம்பிக்க பியந்த வழங்கி வைத்தார். அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வி.ஜி.என்.ஜெயசிறி, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பி.ஹேரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--