Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்

கடற்படையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள ஏழு தீவுகளிலுள்ள பாடசாலை கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்று வந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புங்குடுதீவு அணி சம்பியாகியது.
எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளின் பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இந்தச் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.
கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பியால்.டி.சில்வாவின் ஏற்பாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தனவின் வழிகாட்டலில் இந்தச் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.

15 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றறு, இதன் இறுதிப் போட்டியில், காரைதீவு மற்றும் புங்குடுதீவு அணிகள் மோதின. இதில், புங்குடுதீவு அணி 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப் போட்டியின் நாயகனாக புங்குடுதீவு அணியின் த.கோகுரதாஸ் தெரிவு செய்யப்பட்டது.

வடக்கு கடற்படை தளபதி பியால் டி.சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணி, மற்றும் சிறந்த வீரர்களுக்கான கேடயங்களை வழங்கினார். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த தளபதி, தீவுப்பகுதி மாணவர்களுக்கு போதிய விளையாட்டு பயிற்சிகள் என்பன கிடைப்பதில்லை எனவும் இவ்வாறான மாணவர்களையும் விளையாட்டுத்துறையில் மிளிரச் செய்து தேசிய ரீதியில் பங்குபற்ற வைக்க வேண்டும். இதற்காக கடற்படை தேவையான உதவிகளை வழங்கும் என்றார்.

8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago