Shanmugan Murugavel / 2016 ஜூலை 19 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலகைளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 1795 புள்ளிகளைப் பெற்று யாழப்பாணக் கல்வி வலயம் சம்பியனாகியது.
வடமாகாண விளையாட்டுப் போட்டிகளின் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தடகள மற்றும் மைதான போட்டிகள் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில், புதிதாக மீளப்புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதனடிப்படையில் பெருவிளையாட்டுப் போட்டிகளில் 1056 புள்ளிகளைப் பெற்றிருந்த யாழ்ப்பாணக் கல்வி வலயம் தடகள மற்றும் மைதானப் போட்டிகளில் 739 புள்ளிகளையும் பெற்று 1795 என்ற மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது.
இரண்டாமிடத்தை 1041 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயமும், மூன்றாமிடத்தை 741 புள்ளிகள் பெற்ற வடமராட்சி வலயமும், நான்காமிடத்தை 719 புள்ளிகள் பெற்ற மன்னார் வலயமும் பெற்றுக்கொண்டன.
தொடர்ந்து இடங்களை கிளிநொச்சி -456, முல்லைத்தீவு 370, வவுனியா தெற்கு 310, துணுக்காய் - 256, தென்மராட்சி - 242, மடு - 188, வவுனியா வடக்கு - 114, தீவகம் 60 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டன.
இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வெற்றிபெற்ற வீரர்களுக்கான கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
5 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Oct 2025