2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

லாஸ்ட் மான் ஸ்டான்ட் தொடர்: 2ஆவது வாரப் போட்டி முடிவுகள்

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஸ்ட் மான் ஸ்டான்ட் கிரிக்கெட் தொடரின் இளவேனில் பருவகாலத்துக்கான இவ்வாண்டுப் போட்டிகள், கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், இதன் இரண்டாவது வாரப் போட்டிகள், நேற்று (04) இடம்பெற்றிருந்தன. அப்போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,   

ஹவுஸ் ஒஃப் கிரிக்கெட், ஹெஷன் பிளெக்ஸி பி அணிகளுக்கிடையில், கந்தானையில் இடம்பெற்ற குழு சி போட்டியொன்றில், இரண்டு விக்கெட்டுகளால், ஹவுஸ் ஒஃப் கிரிக்கெட் அணி வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹெஷன் பிளெக்ஸி பி அணி, 19.4 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தரங்க இந்திக 52, சமில நடீஷ் 32, ஸ்ரீநாத் ஜயசேகர 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கே. பீரிஸ், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹவுஸ் ஒஃப் கிரிக்கெட் அணி, 19.1 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், டி. ருக்‌ஷன் 49, டி. கெக்குலவல 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்ரீநாத் ஜயசேகர, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

சப்பர் கிரிக்கெட் கழகம், நவலோகா அணிகளுக்கிடையில், கந்தானையில் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில், ஆறு விக்கெட்டுகளால் நவலோகா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நவலோகா அணி, 20 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டி. மதுவந்த 43, எச். கொரதொட்ட 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எம். றணசிங்க, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு, 136 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சப்பர் கிரிக்கெட் கழகம், 13.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கே. மஹேல 54, எம், றணசிங்க 37. என். ரணதுங்க 35 ஓட்டங்களைப் பெற்றார்.   

ஹெஷன் பிளெக்ஸி பி, கார்கில்ஸ் வங்கி ஆகியவற்றின் அணிகளுக்கிடையே, கந்தானையில் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில், 67 ஓட்டங்களால், ஹெஷன் பிளெக்ஸி பி அணி வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹெஷன் பிளெக்ஸி பி அணி, 20 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹிமலக இதுரங்க ஆட்டமிழக்காமல் 52, ஸ்ரீநாத் ஜயசேகர 33, லலித் பிரசன்னா ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கார்கில்ஸ் வங்கி, 18.1 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், எஸ். குமார 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், சமில நடீஷ், சபுமல் சேனநாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

சப்பர் கிரிக்கெட் கழகம், சகஸ்ர கிரிக்கெட் கழகம் ஆகியவற்றுக்கிடையே, கந்தானையில் இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில், ஆறு விக்கெட்டுகளால் சப்பர் கிரிக்கெட் கழகம் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சகஸ்ர கிரிக்கெட் கழகம், 18.4 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், என். குயின்டஸ் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஆர். பிரியதர்ஷன் 3, ஏ. அபயக்கோன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு, 108 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சப்பர் கிரிக்கெட் கழகம், 11.3 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், என். ரணதுங்க ஆட்டமிழக்காமல் 50, கே. மஹேல ஆட்டமிழக்காமல் 30, ஆர். பிரியதர்ஷன 23 ஓட்டங்களைப் பெற்றனர்.   

சமர் பியல் கிரிக்கெட், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகிவற்றுக்கிடையே, ஹெனேகமவில் இடம்பெற்ற போட்டியில், சமர் பியல் கிரிக்கெட் கழகம் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சமர் பியல் கிரிக்கெட் கழகம், 20 ஓவர்களில், ஏழு விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், என். நிடா 37, எஸ். சந்திரன் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சி. கயன், எம். பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு, 144 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்புப் பல்கலைக்கழகம், 18 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து, 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஆர். டேர்லிங் 31, சி. கயான் 27, எம். பிரதீப் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எஸ். சந்திரன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

களனி விளையாட்டுக் கழகம், மத்தியூஸ் கிரிக்கெட் கழகம் ஆகியவற்றுக்கிடையே, ஹெனேகமவில் இடம்பெற்ற குழு டி போட்டியொன்றில், மூன்று விக்கெட்டுகளால், களனி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியூஸ் கிரிக்கெட் கழகம், 19.3 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஏ. நிலங்க 77, ஓ. லக்மால் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எஸ். டில்ஷான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு, 126 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய களனி விளையாட்டுக் கழகம், 14.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பி. ஜயசிறி ஆட்டமிழக்காமல் 50, எஸ். டில்ஷான் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஏ. குமாரசிறி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .