2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஓர் இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி யாழ் மாணவன் சாதனை

Super User   / 2010 நவம்பர் 17 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த  நிரோதன் , 13 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டி ஆட்டம் ஒன்றில் ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றி புதியதொரு சாதனையை  ஏற்படுத்தியுள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிமியர் லீக் போட்டியில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது .

இதற்குமுன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த லட்சுமி காந் 1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக இடம் பெற்ற போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 09 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு சாதனையை ஏற்படுத்தியிருந்தார் .

அதன்பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரர் மதன், 1996 ஆம் ஆண்டு  பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு எதிராக நடை பெற்ற போட்டியில் ஒரு இன்னிஸ்ஸில் 09 விக்கெட்டுகளை கைப்பற்றி மேற்படி சாதனையை சமப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான போட்டியில் நிரோதன் 09 ஓவர்கள் பந்து வீசி 02 ஓட்டமற்ற ஓவர்களுடன் 18 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றி  சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--