2025 ஜூலை 12, சனிக்கிழமை

மலையக இளைஞர் கழக அணி முதலாமிடம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினால் நடத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான டுவென்டி 20 கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மலையக இளைஞர் கழக அணி முதலாமிடத்தை பெற்றுகொண்டது.

இப்; போட்டியில் இரண்டாம் இடத்தை இந்தியாவின் டெல்லி அணியும் மூன்றாவது இடத்தினை இந்தியாவின் கேரளா அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இந்திய அணிகளின் உறவு முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், மலையக இளைஞர்களின் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிப்பதற்காகவும்; அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினால் இப்போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரு அணிகளான கேரளா மற்றும் டெல்லி ஆகிய கிரிக்கட்  அணிகளும் இலங்கையின் கொழும்பு ஹோல் லென்ஸ், மலையக இளைஞர் கழக கிரிக்கட் அணிகளும் பங்குபற்றின.

இக்கிரிக்கட் சுற்றின் முதல் போட்டிகள் கொழும்பு பெனடிக் மைதானத்திலும், இரண்டாவது போட்டி மோஸ் விளையாட்டு மைதானத்திலும், மூன்றாவதும் இறுதியுமான போட்டி ரோயல் கல்லூரி மைதானத்திலும்; இடம்பெற்றன.

இப்போட்டிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கான கேடயங்களை பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .