Super User / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை பாடசாலைகள் கிரிக்ககெட் சங்கம் நடத்திய 15 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் திருக்கோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரி அணிக்கும், பொலநறுவை, ஹிங்குராங்கொட ரஜரட்ட மத்திய கல்லூரி அணிக்கும் இடையே 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிண்ணியா மத்திய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 47 ஓவர்களுக்கு முகம் கொடுத்து 167 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இஜாஸ் அகமட் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரஜரட்டை மத்திய கல்லூரி அணியினர் 29 ஓவர்களுக்கு 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர். இதில் லகிரு பிரியலால் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
59 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago