2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நுவரெலியா பியுசர் ஸ்பின் விளையாட்டுக் கழகத்தின் மேசைப்பந்து சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)
 
அகில இலங்கை ரீதியில் வருடந்தோறும் நுவரெலியா பியுசர் ஸ்பின் விளையாட்டுக் கழகம்   நடத்தும் மேசைப்பந்து சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை நுவரெலியா புதிய நகர மண்டபத்தின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
 
இப்போட்டியில் நாடு பூராவுமுள்ள 60 பாடசலைகளில் இருந்தும் விளையாட்டு கழகங்களிலிருந்தும் சுமார் 750 விளையாட்டு வீரர்கள்  பங்குபற்றினர். இப்போட்டியின்  பரிசளிப்பு விழா கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பீ.ரட்னாயக்க தலைமையில் நடைபெற்றது.
 
பரிசளிப்பு விழாவில் பங்குபற்றிய பிரதம அதிதிகளையும் வெற்றி பெற்ற சிறுவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பீ.ரட்னாயக்க உடன் நிற்பதையும் போட்டியில் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற நுவரெலியா பியுசர் ஸ்பின் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த தசுனிகா ரட்னாயக்க வெற்றிக் கேடயத்தை அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--