2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி நாளை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

பொதுநிர்வாக அமைச்சின் ஏற்பாட்டுக் அமைவாக வலிதெற்கு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை 28 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு உடுவில் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் இந்தப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் பரிசாக வழங்கப்படவுள்ளது

பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே முதல் கட்டமாக நடைபெறும் இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மாவட்ட மட்டத்தில் போட்டிகள் நடைபெற்று அகில இலங்கை ரீதியில் இறுதிக் கட்டமான போட்டிகள் நடைபெறவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X