Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
தெல்லிப்பளை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற 13 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மோதிக்கொண்டன.
இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் இரு அணிகளும் ஒரு கோல்கள் போடாத நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் புது உத்வேகத்துடன் களமிறங்கி மோதிக்கொண்டன. இந் நிலமையில் மகாஜனால் கல்லூரி தனது முதலாவது கோலை போட்டு முன்னிலைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் பலத்த பலப்பரீட்சையை மேற்கொண்ட நிலையில் மிண்டும் ஒரு கோலை மகாஜனாக் கல்லூரி போட்டு தனது வெற்றியை தீர்மானித்தக் கொண்டது.
ஆட்ட நிறைவில் மகாஜனாக் கல்லூரி 02க்கு 00 என்ற கோல் கணக்கில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியை வெற்றி பெற்று, கோட்ட மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025