Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஜ.எம்.அஸ்ஹர்)
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு டயலொக் ஜீ.எஸ்.எம். அனுசரணையில் அம்பாறை நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் மஹாஓய பிரதேச செயலகமும் ஆண்கள் பிரிவில் உகன பிரதேச செயலகமும் அம்பாறை மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவின் பணிப்புரையின் பேரில் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஜ.அமீர் அலி ஏற்பாடு செய்திருந்த மேற்படி சுற்றுப்போட்டியில் கல்முனை, மகாஓயா, லஹுகல, சாய்ந்தமருது , காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை , அக்கரைப்பற்று, பொத்துவில், உகன, தெஹியத்தக்கண்டிய, இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கரப்பந்தாட்டக் குழுக்கள் கலந்து கொண்டன.
பெண்கள் பிரிவில் தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகக் குழுவை எதிர்த்தாடிய மகாஓய குழு 25 ௨0, 25௧8, 25௨3 என்ற விகிதாசாரத்திலும் ஆண்கள் பிரிவில் மகாஓய குழுவை எதிர்த்தாடிய உகன பிரதேச செயலக அணி 25௧8, 25௨0, 25௰ என்ற விகிதாசாரத்திலும் வெற்றி பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
6 hours ago