2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மட்டு.நீதிமன்ற ஊழியர்களுக்கான விளையாட்டு விழா

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல், எல்.தேவ்)

மட்டக்களப்பு நீதிமன்ற வலய நலன்புரி சங்கத்தினரால் நடத்தப்படும் நீதிமன்ற ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நிறைவு நாள் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

இதில் பிரதம அதிதியாக உயர் நீதீமன்ற நீதியரசர் ஐ.எம்.இமாம் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் அதிதிகளாக அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சொர்ணராஜா, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி வி.சகாயமணி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் வை.தர்மரெத்தினம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் விளையாட்டு நிகழ்வும் களியாட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .