2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு பொலிஸாருக்கு தங்கப்பதக்கம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்,கே.எஸ்.வதனகுமார்)

76ஆவது அகில இலங்கை பொலிஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் கயிறு இழுத்தல் போட்டியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரைத் தோற்கடித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இவர்களைப் பாராட்டும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது.

44 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டிகள் கடந்த மாதம் 23ஆம்,24ஆம்,25ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றன.

இன்றைய பாராட்டு நிகழ்வின்போது கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் விஜய குணவர்த்தன உட்பட சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளும் பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .