Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் மாணவியொருவர் கராத்தேப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 10ஆவது விளையாட்டுப் போட்டி கொழும்பு ஸ்ரீஜயவர்த்தன பல்கலைக்கழகத்தில் கடந்த 1ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. நேற்று மாலை நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவின் 53 கிலோ போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.சர்மிகா வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இச்சுற்றுப் போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 1 தங்கம், 3 வெள்ளி 2 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்துள்ளளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.எம்.இக்பால் தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் வீ.சுவெந்தர் 50 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தையும் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக 70 கிலோ பிரிவிலும் எம்.எம்.எம்.அர்ஸாத் 80 கிலோ பிரிவிலும் வெள்ளிப்பதக்கங்களையும் ரீ.ஜீ.ஸி.லக்மால் 65 கிலோ பிரிவிலும் மற்றும் பீ.எம்.பீ.என்.பஸநாயக 75 கிலோ பிரிவிலும் வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
36 minute ago
37 minute ago