2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

திருமலை, வவுனியா மாவட்ட அணிகள் வெற்றி

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை கிரிக்கெட் சங்கம் நடத்தும் 15 வயதுக்கு  உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணி  5 விக்கெட்டுக்களால் மட்டக்களப்பு மாவட்ட அணியினை வெற்றி கொண்டது.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  மட்டக்களப்பு மாவட்ட அணி 37 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி  22.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நோமன்ஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் வவுனியா மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வவுனியா மாவட்ட அணி  42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் மாவட்ட அணி 27.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 93 ஒட்டங்களை பெற்றது. இதன் மூலம் வவுனியா மாவட்ட அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .