2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு 234ஆவது இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள கூடைப்பந்தாட்ட முகாமும், சுற்றுப்போட்டியும் எதிர் வரும் 22, 23ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளன. இப்பயிற்சி முகாமிற்கென மட்டக்களப்பு மடாவட்ட ரீதியாக 150 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக 234ஆவது படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே தெரிவித்தார்.

முதல்நாள் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் கூடைப்பந்தாட்ட குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜனக ரத்நாக்க பிரதம அதிதியாகவும், இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.எச்.எஸ்.பி.பெரேரா பிரதம அதிதியாகவுயும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முதல் நாளான 22ஆம் திகதி பயிற்சி முகாம் ஆரம்ப வைபவம்இசுற்றுப்போட்டிக்கான பிரகடனமும் இடம் பெறும். இரண்டாம் நாளான 23ஆம் திகதி கூடைப்பந்தாட்ட கண்காட்சியும் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும்இபரிசளிப்பு விழாவும் இடம்பெறுமமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கெப்டன் கே.ராஜபக்ஸ தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .