2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித மிக்கேல் அணி வெற்றி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

முதல் தடவையாக மட்டக்களப்பு 234ஆவது இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய இராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனாகியுள்ளது.

இராணுவத்தினரால் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே தலைமையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி முகாமில் நடைபெற்றது.

6 இராணுவ அணிகளும், 4 விளையாட்டுக் கழகங்களும் பங்குகொண்டிருந்தன. நேற்று மாலை புனித மிக்கேல் கல்லுரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 50க்கு 42 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றனர். மிக்கேல்
அணிவீரர் எஸ்.சுதாகர் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--