2025 ஜூலை 03, வியாழக்கிழமை

படையினர் எமது வீரர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் அவர்களை வெற்றியடையச் செய்கின்றன

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

படையினர் எமது வீர வீராங்கனைகளுக்கு இறுதி நேரத்தில் வழங்கிய பயிற்சிகளின் மூலமே வட மாகாண அணி குறிப்பா யாழ். மாவட்ட வீரர்கள் நான்கு தங்கப் பதக்கங்களை கூடுதலாக பெறக் கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது என்று வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.நடராசா தெரிவித்துள்ளார்.

அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடத்திய மட்டுப்படுத்திய ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெல்லிப்பளை பூமா விளையாட்டுக் கழக மைதானத்தில் க.தயாளபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்:

பிள்ளைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால் கல்வி பாதிப்படையும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற முடியாது என்று இன்று பல பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இன்று இடம் பெற்ற இறுதிப் போட்டியில் ஒரு அணியிலேயே இரண்டு வைத்திய கலாநிதிகள் வீரர்களாக விளையாடியுள்ளார்கள். இது விளையாட்டின் ஆற்றலை சிறப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதே போன்று யாழ். மாவட்ட வீர, வீராங்கனைகள் ஒன்பது பேர் தங்கப் பதக்கத்தை தேசிய மட்டத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் பெற்றுள்ளார்கள்.

இவர்கள் வெற்றி பெற்றதும் மைதானத்தில் வைத்தே கைநிறைய சம்பளத்துடன் படைத்தரப்பினர் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வந்தார்கள். இவர்கள் படையில் கடமையாற்றுவதற்காக அல்ல. குறிப்பிட்ட படையினருக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதுடன் தமது மேற்படிப்பையும் கூட மேற்கொள்ளலாம் என்பதற்காகவே என்று தெரிவித்தனர்.
 
இன்று விளையாட்டுத்துறை அனைவருக்கும் வாழ்வு கொடுக்கக் கூடிய ஒரு துறையாக மாறியுள்ளது- எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .